நீ இல்லையேல் கவிதையில்லை

ஆயிரம் கவிதைகள் ….
ஆயிரம் பின்னூடல்கள் ….
ஆயிரம் கவிரசிகர்கள்…..
பலநூறு சிறப்புகவிதை ….!

அத்தனையையும் ….
தாண்டிய சிறப்புகவிதை …..
என்னவள் சொன்ன வார்த்தையே…..!

என் கவிதையை …
ரசித்து விட்டு சொன்னாள்…..
இத்தனை கவிதையை……
எழுதிய உன் கையில்…….
முத்தமிட்ட ஆசை……!

அவளுக்கு புரியவில்லை…..
அவள் இல்லையேல் எனக்கு……
கவிதையே இல்லை…………!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை

ஓலமிட்டு மக்களை மயக்காதீர் …..!!!

ஓகோ என்று வாழ ஆசைப்படாதே …..
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ….
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே …..
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு …..!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் …..
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ….
ஓரம்போய் மக்களை விற்காதீர் …..
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் …..!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு….
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ….
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு …..
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து …….!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ….
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே….
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் …
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ….!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

அகராதி தமிழில் கவிதை

ஒளி கொண்ட இதயங்களே …..
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ….
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ….
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ……!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை …..
ஒன்று கூடியே துடைத்தெறிவோம்….
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ….
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் …..!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை …..
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் …..
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும்…….
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் …..!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று …..
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு …..
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு …..
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்….!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

புதைத்துவிட்டேன் உன்னில்….!!!

மழை பெய்யும் போது…..
இரு கரத்தை குவித்து……
உள்ளங்கையில் மழை…..
துளியை ஏந்தும்போது….
இதயத்தில் ஒரு இன்பம்….
தோன்றுமே அதேபோல்…..
உன்னை யாரென்று…..
தெரியாமல் இருந்த நொடியில்…..
நீ என்னை திடீரென பார்த்த…..
கணப்பொழுது……..!!!
என்னவனே என்னை…..
புதைத்துவிட்டேன் உன்னில்….!!!

^^^
என்னவனே என் கள்வனே 03
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

சமூக விழிப்புணர்வு கவிதை

சமூக தளங்கள் ……..
சமூகத்தை சீர் படுத்தும் ……
தளங்களாக இருக்கவேண்டும் …..
சீரழிக்கும் தளங்களாக…….
தளங்களாக இருக்க கூடாது ……!!!

இராணுவ புரட்சி மூலம்…..
ஆட்சியை மாற்ற இருந்தவர்களை…..
சமூகதள தகவல் மூலம் மக்கள்…..
புரட்சி வெடித்து இராணுவ புரட்சி…..
தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள…..
செய்தி பரிமாற்றம் உதவியதை…..
யாரும் மறந்திடமாட்டார்கள்………!!!

தலைவன் இல்லாமல் தம் இன…..
பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்…..
போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு……
போராட்டம் சமூக தள பரிமாற்றம்…..
உலகையே திரும்பி பார்க்கவைத்து……
உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை…..
படைத்தது சமூக தள ஆயுதம்……..!!!

மறுபுறத்தில் வேதனையான …….
சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்………
நடைபெற்றுகொண்டிருப்பதும் ……..
மறுப்பதற்கில்லை………
தனிப்பட்ட பகைமைக்கும்………
விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்……
பயன்படுவது வேதனை அளிக்கிறது………!!!

எங்கோ நடைபெற்ற நிகழ்வை…….
திரித்து கூறுதல் பொருத்தமற்ற……
ஊகங்களை மக்கள் மத்தியில்……
பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே……
உண்மையை பலமுறை சொல்லுங்கள்…..
அது சமூகத்தின் தேவைப்படுகள்…..
பொய்யை பலமுறை கூறி உண்மை…..
ஆக்காதீர்கள் அது சமூக விரோதம்…..!!!

இன்னும் பல சமூக அவலமுண்டு…….
அதற்கும் போராட்ட தேவையுண்டு……
தப்பான தகவல்களை பரப்பினால்……
உங்கள் உண்மையான தேவைக்கு……
சமூகம் முன் வர தயங்கும்……….
எந்த ஒரு ஆயுதத்தையும் உண்மைக்காக…….
பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியுண்டு….
சிலவேளை தோற்றலும் வரலாறு ஆகும்……!!!

நம் கையில் ஆயுதம் இருக்கிறது……
என்பதற்காக எப்படியும் பயன்படுத்தலாம்…….
எப்போதும் பயன்படுத்தலாம் என்ற……
எண்ணம் மாறவேண்டும் உண்மைக்கு……
பயன்படுத்துவோம் தொடர் வெற்றியை…..
பெறுவோம்………………………….!!!

&
சமூக விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்

முள்ளாய் குத்துகிறது…..!!!

நீ
அருகில் இருக்கும்…..
நொடிகள் எல்லாம் …..
என்கடிகார முற்கள் ……
நெருஞ்சி முற்கள்…..
என்னை விட்டு பிரிய….
போகிறாய் என்றதும்…..
முள்ளாய் குத்துகிறது…..!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிதை எழுதும் நேரம் இதுவல்ல

அடுக்கு  மொழி பேசி …….
கவிதை எழுதும் நேரம் …..
இதுவல்ல -என்றாலும் …..
அடக்க நினைப்பவனை ….
அடுக்கு மொழியால் …..
சாட்டை அடி அடிக்கவே …..
அடுக்கு மொழியை ……
பயன்படுத்துகிறேன் ……!!!

ஜல்லியாய் பாயும் காளையை ……
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ……
தமிழினத்தை – கிள்ளி எறியலாம் …..
என்று தப்பு கணக்கு போடும் …..
சில்லறைகளே – நாம் கல்லறை ….
என்றாலும் நிறைவேறாது …..
உங்கள் எண்ணம் …………..!!!

பாய்ந்து வரும் காளைகள் ……
எங்கள் நெஞ்சின் மேல் …..
பாய் வதில்லை நாங்கள் …..
நெஞ்சுசோடு அணைக்கவே …..
பாய் கின்றான் – அடக்காதீர் ….
அடக்கினால் உங்கள் நெஞ்சின் …..
பாய் வதற்கு வெகு தூரமில்லை …..!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்